என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜீவ சமாதி"
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் தனநாராயணன் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர் தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த சாமியார் ஒருவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.
இதையடுத்து உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.
இறந்த சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்திணங்க சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் தனநாராயணன் ஜீவ சமாதி அல்லது ஜலசமாதி ஆனதாகவும், அவருக்கு சித்தர் சமாதி அமைத்து வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், ஆரணி டி.எஸ்.பி. செந்தில், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்
அவர்கள் புதைக்கப்பட்ட தனநாராயணனின் உடலை இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர்.
சிறுவன் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்யாமலும், உடலை பிரேத பரிசோதனை செய்யாதது குறித்தும் சந்தவாசல் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் ஆசிரியர்.
இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வலிப்பு நோய்க்காக யோகாசன பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தனநாராயணன் தவறி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த சாமியார் ஒருவர் கூட்டமாக பொதுமக்கள் திரண்டு நிற்பதை பார்த்து அங்கு வந்தார். அவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.
இதையடுத்து தனநாராயணனை ஜீவ சமாதி செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.
சாமியார்கள், சித்தர்கள் உடலை அடக்கம் செய்வது போல் சிறுவன் உடலையும் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமலை கிராமத்தில் திருமலை ஜெயினர் மடம் உள்ளது. போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 72 வயதான மாதாஜி என்கிற ஜெயின் துறவி வந்துள்ளார். அவர் இங்கு ஜீவசமாதி அடைவதற்காக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். இன்னும் 2 நாளில் அவர் ஜீவசமாதி அடைந்து விடுவார் என தகவல் பரவியதால் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மாதாஜியிடம் அருளாசி பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருமலை ஜெயின் மடாலய மடாதிபதி தவளகீர்த்தி சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
பவாரிதேவி என்கிறவர் கடந்த 2010-ல் தாய், தந்தையர், கணவரையும் துறந்தார். பின்னர் ஜெயின் மதத்தில் துறவியானார். அவர் சுல்லிகா ஸ்ரீ 105 ஸ்ரீசுகுந்தன்மதி மாதாஜி என்ற பெயருடன் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று பல ஊர்களில் ஜெயின் மதத்தின் பெருமைகளை விளக்கி வருகிறார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி மாதாஜியாக தீட்சை பெற்றார். இவரது தாயார் பெயர் சோசார்பாய், தந்தை ராம்சந்திரசுக்குவால், கணவர் பெயர் கன்யாலால் ஜெயின். இவர் பிறந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் லக்னாபூர், சவாயி மத்பூர் ஆகும்.
இவர் கடந்த 31-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தார். திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்தில் வந்து தங்கியுள்ள அவர், விரைவில் ஜீவ சமாதி ஆவதாக கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை தற்போது 12 மாதாஜிகள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில் ஜீவ சமாதி அடைந்துவிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்